ஐ.பி.எல் 2024: அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்த தெலுங்கானா முதலமைச்சர்

ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதினதெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்
ஐ.பி.எல் 2024: அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்த தெலுங்கானா முதலமைச்சர்
Published on

ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com