ஐபிஎல் 2024: புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறதுமும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது
ஐபிஎல் 2024: புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
Published on

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது.

இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com