லக்னோ அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து குர்ணால் பாண்ட்யா நீக்கம்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.
லக்னோ அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து குர்ணால் பாண்ட்யா நீக்கம்
Published on

லக்னோ:

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.

கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com