ஐபிஎல் 2024: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து அதிரடி வீரர் விலகல்

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் 2024: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து அதிரடி வீரர் விலகல்
Published on

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com