கேஎல் ராகுலை தொடர்ந்து மற்றொரு லக்னோ வீரர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகல்

அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்தார்.இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கேஎல் ராகுலை தொடர்ந்து மற்றொரு லக்னோ வீரர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகல்
Published on

லக்னோ:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

இந்த நிலையில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெயதேவ் பந்தை வீசும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயதேவ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவர் வருகிற ஜூன் 7-ம் தேதி லண்டனின் தி ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள்ளாக உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com