தரம்சாலா டெஸ்ட்: அரைசதம் விளாசிய கில்- சதத்தை நோக்கி ரோகித் சர்மா

ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.கில் 64 பந்தில் அரைசதம் அடித்தார்.
தரம்சாலா டெஸ்ட்: அரைசதம் விளாசிய கில்- சதத்தை நோக்கி ரோகித் சர்மா
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

45 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், கில் 65 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com