டி20 உலகக் கோப்பை போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

டி20 உலகக் கோப்பை 'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
டி20 உலகக் கோப்பை போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
Published on

நியூயார்க்:

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ம் தேதியும், அமெரிக்காவுடன் 12-ம் தேதியும், கனடாவுடன் 15-ம் தேதியும் மோதுகிறது.

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தது. இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com