பெண்கள் ஆசிய கோப்பை: தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது.
பெண்கள் ஆசிய கோப்பை: தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி
Published on

சில்ஹெட்:

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நாட்டாய பூச்சாதம் 21, நருமோல் சாய்வாய் 21 ரன்கள் எடுத்தனர். அந்த 2 பேரை தவிய யாருமே 2 இலக்க ரன்களை எடுக்கவில்லை. இதில் 3 பேர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர்.

இறுதியில் தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பெண்கள் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com