ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

அதிரடியாக விளையாடிய மந்தனா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

தம்புல்லா:

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தமாக விளையாடிய ஷபாலி வர்மா 19 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9, கவூர் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்தினார். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com