கவுர்- மந்தனா அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

மந்தனா 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுர் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கவுர்- மந்தனா அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

பெங்களூரு:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ஷபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷபாலி வர்மா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேமலதா 24 ரன்னில் வெளியேறினார்.

இதனையத்து கேப்டன் கவுர்- மந்தனா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா சதம் விளாசி அசத்தினர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மந்தனா 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய கவுர் கடைசி ஓவரில் சதம் அடித்தார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. கவூர் 103 ரன்னிலும் ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com