

2024 டி20 உலகக் கோப்பையோடு ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பின் இந்திய ஆண்கள் டி20ஐ அணியின் கேப்டனாக சூர்யாகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2026 மார்ச் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் சூரியகுமார் யாதவின் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ தெருவுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இதற்கான தீவிர ஆலோசனையில் உள்ளனர். இன்று நடக்கும் பிசிசிஐ இணையவழி சந்திப்பில் இதற்கான விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20ஐ தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அக்சர் பட்டேலுக்குப் பதிலாக திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போதைய ஒருநாள் போட்டிகளின் துணை கேப்டனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கேப்டன் பதவிக்கு சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அக்சர் படேல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் பரிசீலிக்கபட்டனர்.