சூர்யகுமாரை ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்

2026 ஐபிஎல் தொடரில் சூர்யா மோசமாக விளையாடிய நிலையில், அவரது தலைமைப் பொறுப்பை தேர்வாளர்கள் மறுபரிசீலனை செய்துள்ளனர்.
சூர்யகுமாரை ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்
Published on

இந்திய கிரிக்கெட் அணி வரவிருக்கும் நாட்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, டி20-ஐக்களில் விளையாட உள்ளது.

இந்த போட்டிகளுகான 16 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 16வது இந்திய டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 36 வயதான சூர்யகுமார் யாதவை கேப்டன் பதவியிலிருந்து விலக்கி, பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் சூர்யாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை இழந்தபோதுதான் நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் சூர்யகுமாரின் விலகல் எனக்கு ஆச்சரியமில்லை.

ஆனால் ரோஹித்தின் முடிவு இதைவிட மூன்று மடங்கு பெரியது. அது ஏற்கெனவே நடந்துவிட்டதால், இது ரோஹித்துடன் மட்டும் நடக்கவில்லை என்பதையும், எதிர்காலத்திலும் இதுதான் எங்கள் வழக்கம் என்பதையும் காட்டுவதற்காக இது நடந்துள்ளது.

சூர்யா கேப்டனாக கோப்பையை வென்றிருக்கிறார், அதனால் அவர் அணியில் இருக்கத் தகுதியானவர் என்று நான் உணர்கிறேன். அவர் ரன்கள் எடுக்கவில்லை.

சூர்யா ஒரு தலைவராகச் சிறப்பாகச் செயல்படுகிறார், எனவே அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர் தன்னை நிரூபித்த ஒரு வீரர்.

அவர் ரன்கள் எடுக்கவில்லை, ஆனால் அவரது சாதனை மிகச் சிறப்பாக இருந்துள்ளது. வெற்றி பெற்ற கேப்டனுக்கு அதிக ஆதரவு அளிக்கப்பட வேண்டும்” என்று தனது யூடியூப் சேனலில் கைஃப் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com