2வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை 162 ரன்களை எடுத்தது.
2வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
Published on

பல்லகெலே:

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிஸ், நிசாங்க இறங்கினர். நிசாங்க 10 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெராரா அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.

இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com