4வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
4வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
Published on

ஹராரே:

ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.

இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com