ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அபாரம்: 3ம் நாள் முடிவில் 322 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா

இந்திய அணியின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் சதமடித்தார்.மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 196 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அபாரம்: 3ம் நாள் முடிவில் 322 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா
Published on

ராஜ்கோட்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். சுப்மன் கில்லும் அரை சதமடித்தார்.

104 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட்டானார்.

மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com