ஹாட்ரிக்குடன் 5 விக்கெட் எடுத்த வைஷ்ணவி சர்மா: மலேசியாவை சுருட்டி வீசிய இந்தியா

வெறும் 2.5 ஓவரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது. போட்டியின் ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஹாட்ரிக்குடன் 5 விக்கெட் எடுத்த வைஷ்ணவி சர்மா: மலேசியாவை சுருட்டி வீசிய இந்தியா
Published on

கோலாலம்பூர்:

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மலேசியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

இறுதியில், மலேசியா அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து ஆடிய இந்திய அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com