இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்- 321 ரன்களுக்கு 'இந்தியா பி' ஆல் அவுட்

இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்- 321 ரன்களுக்கு 'இந்தியா பி' ஆல் அவுட்
Published on

துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.

இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com