சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்: 4ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 314/4

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினர்.
சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்: 4ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 314/4
Published on

ராஜ்கோட்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது.

நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஜெய்ஸ்வால் 149 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com