ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: முகேஷ் குமார் விலகல்- தீபக் சாஹருக்கு இடம்

முதல் 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: முகேஷ் குமார் விலகல்- தீபக் சாஹருக்கு இடம்
Published on

கவுகாத்தி:

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com