

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதுவரை 9 முறை நடந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 12) தொடங்க உள்ளது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன.
இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும். அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி வருகிற 14-ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆடுகிறது. இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது.