ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா

நியூசிலாந்து 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.
kohli, rohit
Published on

ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி, ஒருநாள் தொடருக்கான பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது.

ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 118 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி 113 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 103 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி 102 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும், பாகிஸ்தான் 100 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும் உள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் 6, 7, 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com