2024-ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு

நடப்பு ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.இந்தப் பரிந்துரைப் பட்டியலில் 2 இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு
Published on

துபாய்:

ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.

அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த விருதை இந்தியாவின் விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com