ரஞ்சி டிராபியில் வீரர்கள் பெறும் சம்பளம் இதுதான்

மூத்த வீரர் ரஞ்சி டிராபியில் இறுதி வரை விளையாடினால் ரூ.25 லட்சம் சம்பளம் பெறுவார். மற்றவர்கள் 17 முதல் 22 லட்சம் வரை சம்பளம் பெறுவர் என தெரிவித்துள்ளது.
ரஞ்சி டிராபியில் வீரர்கள் பெறும் சம்பளம் இதுதான்
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். எனவே, உள்நாட்டு கிரிக்கெட்டின் நிலையை உயர்த்த முடிவுசெய்துள்ள பிசிசிஐ, ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரிப்பதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி வருகிறது.

முதல் தர கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீரர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பிசிசிஐ பரிந்துரைகளை கேட்டுள்ளது.

இந்நிலையில், ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரர்களுக்கான சம்பள விவரம்:

41-60 போட்டிகளைக் கொண்ட வீரர்கள்: விளையாடும் நாள் ஒன்றுக்கு ரூ. 60,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ.30,000

21-40 போட்டிகள் கொண்ட வீரர்கள்: விளையாடும் ஒரு நாளைக்கு ரூ.50,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ. 25,000

0-20 போட்டிகளைக் கொண்ட வீரர்கள்: விளையாடும் நாள் ஒன்றுக்கு ரூ.40,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ. 20,000

விளையாடாத அணி உறுப்பினர்கள்: ஒரு நாளைக்கு ரூ.25,000 பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரர் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி வரை விளையாடினால் அவர் 25 லட்சம் சம்பளம் பெறுவார். மற்றவர்கள் 17 முதல் 22 லட்சம் வரை சம்பளம் பெறுவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com