ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் - முன்னாள் மகளிர் அணி கேப்டன் கோரிக்கை

முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் - முன்னாள் மகளிர் அணி கேப்டன் கோரிக்கை
Published on

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.

தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர். அவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினால் கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com