பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்ட்யா சகோதரர் கைது

ஹர்திக், குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த் சில நாட்களாக ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்ட்யா சகோதரர் கைது
Published on

ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்த முடிந்த லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. 2 முதல் 4 இடங்கள் முறையே கொல்கத்தா, லக்னோ, சென்னை ஆகிய அணிகள் உள்ளன.

இந்த புள்ளி பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்தில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி 4-வது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் 5-வது போட்டியில் ஆர்சிபி அணியுடன் இன்று மோதுகிறது.

இந்த தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா குடும்பம் தொடர்பான ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்ணால், ஹர்திக், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூ.1 கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப விகிதத்தையும் அதிகரித்து வைபவ் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com