எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - ஹர்திக் பாண்ட்யாவின் தன்னம்பிக்கை பதிவு

காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - ஹர்திக் பாண்ட்யாவின் தன்னம்பிக்கை பதிவு
Published on

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உலகக்கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "2023 உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், எனது கடின உழைப்பிற்கான வெற்றி, எனக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்தது. உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com