பதிரனா பந்து வீச வரும்வரை ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது: ஹர்திக் பாண்ட்யா

ஷிவம் டுபே, ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினர்.எம்.எஸ். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
பதிரனா பந்து வீச வரும்வரை ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது: ஹர்திக் பாண்ட்யா
Published on

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

சென்னையிடம் தோல்வியடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

207 இலக்கு என்பது எட்டக்கூடியதுதான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். திட்டத்திலும் அணுமுறையிலும் ஸ்மார்ட்டாக இருந்தனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டம்பிற்கு பின்னால் இன்று சொல்லிக்கொடுக்கும் டோனி என்ற நபரை அவர்கள் பெற்றிருந்தனர். அது அவர்களுக்கு உதவியாக இருந்தது.

பதிரனா பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்துவதற்கு முன்பு வரை நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம். அடுத்த நான்கு போட்டிகளை எதிர்நோக்கி இருக்கிறோம். அதை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீவிரம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com