இந்தியா - இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி: விடுமுறை அறிவிப்பு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.
இந்தியா - இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி: விடுமுறை அறிவிப்பு
Published on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு மேல் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்பட பலர் விளையாடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com