குஜராத் அணி வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி
Published on

புதுடெல்லி:

16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்குகிறது.

குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com