எனக்கு எல்லாமே ரெட்பால் கிரிக்கெட்டுதான்: மானவ் சுதர் சொல்கிறார்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மானவ் சுதவ், எனக்கு எல்லாமே டெஸ்ட் கிரிக்கெட்டுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு எல்லாமே ரெட்பால் கிரிக்கெட்டுதான்: மானவ் சுதர் சொல்கிறார்
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான இடது கை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதர் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்தினார்.

தற்போதுள்ள இளம் வீரர்கள் ஒயிட் பால் கிரிக்கெட்டில், குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள். மானவ் சுதரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இந்த நிலையில், எனக்கு ரெட்பால் கிரிக்கெட்டுதான் எல்லாமே என்று மானவ் சுதர் தெரிவித்துள்ளார். இது குறித்து மானவ் சுதர் கூறியதாவது:-

நான் விளையாடத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, ஒவ்வொரு நிலையாக முன்னேறிச் சென்றபோது ரெட்பால் கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தின் உச்சமாகும். எனவே, நான் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் அல்லது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும்போதும், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதே எப்போதும் எனது இலக்காக இருந்தது. எனக்கு தொப்பியை வழங்கும்போது குல்தீப் (யாதவ்) பேசியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அனைவரும் என்னை மிகவும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தியதால், அது எனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தந்தது.

நான் எனது அறிமுக போட்டியில் விளையாடவிருப்பதாக கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது. ஏனெனில், நான் விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகவும், என் தந்தையின் கனவாகவும், அனைவரின் கனவாகவும் இருந்து வந்தது.

இவ்வாறு மானவ் சுதர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com