ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை- கைல் மேயர்ஸ் புதிய சாதனை

கைல் மேயர்ஸ் தனது அறிமுக ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 73 ரன் எடுத்திருந்தார்.சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 53 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை- கைல் மேயர்ஸ் புதிய சாதனை
Published on

சென்னை:

ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் லக்னோ - சென்னை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது.

அதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 53 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். கைல் மேயர்ஸ் தனது அறிமுக ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 73 ரன் எடுத்திருந்தார். நேற்று 53 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல்-ல் ஒரு வீரர் தனது முதல் இரு இன்னிங்சில் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com