முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.
toss
Published on

இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.

இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் அசோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்திய அணியின் விவரம் வருமாறு:

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ்.

முன்னதாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு வெற்றி கூட பெறாமல் இழந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com