வீறு கொண்டு எழுந்த பாண்ட்யா, ஷிவம் துபே: இங்கிலாந்துக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது. ஷிவம் துபே, பாண்ட்யா அதிரடியில் மிரட்டினர்.
வீறு கொண்டு எழுந்த பாண்ட்யா, ஷிவம் துபே: இங்கிலாந்துக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

மும்பை:

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே வீறு கொண்டு எழுந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா 53 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 53 ரன் எடுத்துள்ளார்.

இறுதியில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமூது 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com