உங்கள் வீட்டு ஆண்களுக்கு சொல்லிக்கொடுங்கள் - சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டா ஸ்டோரி

பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.
suryakumar yadav insta story
Published on

கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com