இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: டி.வி. பார்வையாளர்களை ஈர்க்க இங்கிலாந்து எடுத்த முடிவு

ஜூலை 1-ந்தேதி முதல் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: டி.வி. பார்வையாளர்களை ஈர்க்க இங்கிலாந்து எடுத்த முடிவு
இங்கிலாந்து- இந்தியா டி20 தொடர்
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இங்கிலாந்து செல்கிறது. அதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகளில் இரவில் தொடங்குகின்றன. இந்த போட்டிகளில் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 தொடங்குவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்திய நேரப்படி போட்டி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கும். இதனால் இந்தியாவில் டி.வி. பார்வையாளர்கள் குறைய வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போட்டியை முன்னதாக ஒருமணி நேரம், அதாவது 5.30 மணிக்கு தொடங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் போட்டியை இரவு 10 மணி முதல் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் Sky Sports மற்றும் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஆகியவை போட்டியை ஒளிபரப்புகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com