எம்புட்டு மண்டகனம்... துபே அடித்த பவுண்டரிகள்தான் சஞ்சு சாம்சன் பற்றி பேச காரணம் - கம்பீர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்தார். இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
எம்புட்டு மண்டகனம்... துபே அடித்த பவுண்டரிகள்தான் சஞ்சு சாம்சன் பற்றி பேச காரணம் - கம்பீர்
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் கம்பீர், "என்னை பொறுத்தவரை ஷிவம் துபே அடித்த அந்த 2 பவுண்டரிகள்,சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையானது. துபே அதை அடிக்காமல் போயிருந்தால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி பேசியிருக்க மாட்டார்கள். பெரிய பங்களிப்புகள் தலைப்புச் செய்தியாகலாம். ஆனால், இது போன்ற சிறிய பங்களிப்புகள்தான் அணி வெற்றிக்கு உதவுகிறது" என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சனை பாராட்ட மனமில்லாமல் பேசிய கம்பீரை இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com