டிஎன்பிஎல் குவாலிபையர் 2: 108 ரன்னில் சுருண்டது திருப்பூர்

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் 108 ரன்னில் சுருண்டது.
டிஎன்பிஎல் குவாலிபையர் 2: 108 ரன்னில் சுருண்டது திருப்பூர்
Published on

சென்னை:

டிஎன்பிஎல் தொடரின் குவலிபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மான் பாப்னா அதிகமாக 26 ரன்கள் எடுத்தார்.

திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், சுபோத் பாதி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com