சதத்தை தவறவிட்ட பாபா இந்திரஜித்: கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

முதலில் ஆடிய கோவை அணி 172 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 176 ரன் எடுத்து வென்றது.
சதத்தை தவறவிட்ட பாபா இந்திரஜித்: கோவையை வீழ்த்திய திண்டுக்கல்
Published on

நெல்லை:

8-வது டி என் பி எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக் கான் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஷாருக் கான், அதிக் உர் ரகுமான் ஜோடி அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் அரை சதம் கடந்த பாபா இந்திரஜித் இந்தப் போட்டியிலும் அதிரடியை தொடர்ந்தார்.

பாபா இந்திரஜித் 49 பந்தில் 5 சிக்சர், 11 பவுண்டரியுடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 36 ரன் எடுத்தார்.

இறுதியில், திண்டுக்கல் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com