பிசிசிஐ பொறுப்பு செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்

ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்லே பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது. இதையடுத்து, ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிசிசிஐ பொறுப்பு செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்
Published on

புதுடெல்லி:

ஐ.சி.சி. முன்னாள் தலைவரான கிரேக் பார்க்லேயின் பதவிக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது. இதையடுத்து, புதிய தலைவராக ஜெய் ஷா கடந்த ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐ.சி.சி. தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில், ஐசிசி இயக்குநர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. உலகளவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதை தயார் செய்வதையும் வலியுறுத்தினார். பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய காலக்கெடுவில் பிசிசிஐ உள்ளது.

இந்நிலையில், பி.சி.சி.ஐ.யின் இணை செயலாளரான தேவஜித் சைகியா தற்காலிக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com