தீபக் சாஹருக்கு பதில் மாற்று வீரர் அறிவித்தது பிசிசிஐ

ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.
தீபக் சாஹருக்கு பதில் மாற்று வீரர் அறிவித்தது பிசிசிஐ
Published on

புதுடெல்லி:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com