ஜெயிஸ்வால், பட்லர் அதிரடி - டெல்லி வெற்றிபெற 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.முதலில் ஆடிய ராஜஸ்தான் 199 ரன்கள் குவித்தது.
ஜெயிஸ்வால், பட்லர்
ஜெயிஸ்வால், பட்லர்
Published on

கவுகாத்தி:

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினர்.

இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்த்து. ஜாஸ் பட்லர் 51 பந்தில் 71 ரன்னும். ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் சிக்சர்களாக விளாசினார். ஹெட்மயர் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com