சொந்த மண்ணில் டெல்லியை துவம்சம் செய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே

டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய சென்னை 223 ரன்களை குவித்தது.
சொந்த மண்ணில் டெல்லியை துவம்சம் செய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே
Published on

புதுடெல்லி:

16-வது ஐபிஎல் தொடரில் 67-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிவம் துபே, கான்வே ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் அடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில், ருதுராஜ் 79 ரன்களில் அவுட் ஆனார். கான்வே 87 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. சென்னை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் டெல்லி அணி சிக்கியது. 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினார். வார்னர் 87 ரனனில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், டெல்லி அணி 146 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்தது.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், பதீரனா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com