பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர வாய்ப்பு

சேத்தன் சர்மா தலைமையிலான முந்தைய தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது.ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர வாய்ப்பு
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான செயல்முறையை பிசிசிஐ தொடங்கியதால், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இருப்பினும், சேத்தன் சர்மா தனது பதவியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பித்தவர்களில் சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ராத்ரா, எஸ்எஸ் தாஸ், எஸ்.ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நாளையும் நேர்காணல் தொடரும்.

வெங்கடேஷ் பிரசாத் இந்த நேர்காணலுக்கான பட்டியலில் இல்லை. ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com