சிஎஸ்கே அபார பந்துவீச்சு - ஐதராபாத்தை 134 ரன்களில் கட்டுப்படுத்தியது

முதலில் ஆடிய ஐதராபாத் 134 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே அபார பந்துவீச்சு - ஐதராபாத்தை 134 ரன்களில் கட்டுப்படுத்தியது
Published on

சென்னை:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் 18 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 34 ரன்னிலும், ராகுல் திரிபாதி 21 ரன்னிலும், மார்கிரம் 12 ரன்னிலும், கிளாசன் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com