ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால்

ரஞ்சி கோப்பை தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் காலிறுதியில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணியில் நடந்த முதல் அரையிறுதியில் பெங்கால், ஆந்திரா அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 83 ரன்னும், ஸ்ரீகர் பரத் 47 ரன்னும், ஷேக் ரஷீத் 46 ரன்னும் எடுத்தனர்.

பெங்கால் சார்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய பெங்கால் அணி 629 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுதீப் குமார் கராமி ஒரு ரன்னில் முச்சதத்தை தவறவிட்டு, 299 ரன்னில் அவுட்டானார். ஷகிர் அபிப் காந்தி 95 ரன்னும், சுமந்தா குப்தா 81 ரன்னும், முகமது ஷமி 53 ரன்னும் எடுத்தனர்.

ஆந்திரா சார்பில் ஷேக் ரஷீத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

334 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆந்திரா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. நிதிஷ் குமார் ரெட்டி 90 ரன்னும், திரிபுரானா விஜய் 46 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஆந்திரா அணி இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

பெங்கால் அணி சார்பில் ஷபாஸ் அகமது 4 விக்கெட்டும், சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சுதீப் குமார் கராமிக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com