மகளிர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ
Published on

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com