3வது டி20 போட்டியிலும் வெற்றி: ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
3வது டி20 போட்டியிலும் வெற்றி: ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்
Published on

ஷார்ஜா:

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. 2 போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. டார்விஷ் 32 ரன்னும், செடிகுல்லா அடல் 28 ரன்னும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் சயீபுதின் 3 விக்கெட்டும், நவ்சம் அகமது, தன்ஜிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜிம் ஹசன்

பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் சேர்த்தார்.

சயீப் ஹாசன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 64 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், வங்கதேசம் 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-0 என முழுவதுமாகக் கைப்பற்றி அசத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com