2வது டி20 போட்டியிலும் வெற்றி - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது.ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.
2வது டி20 போட்டியிலும் வெற்றி - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது
Published on

சில்லெட்:

ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.

அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது.

அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அஸ்மதுல்ல 25 ரன்னும், இப்ராகிம் ஜட்ரன் 22 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 35 ரன்னும், அபிப் ஹொசைன் 24 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com