3வது ஒருநாள் போட்டி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது வங்காளதேசம்

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 129 ரன்கள் எடுத்து வென்றது.
3வது ஒருநாள் போட்டி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது வங்காளதேசம்
Published on

சட்டோகிராம்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்மத்துல்லா உமர்சாய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 56 ரன்னில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தைஜூல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஷகிப் அல் ஹசன் 39 ரன் எடுத்தார்.

இறுதியில், வங்காளதேச அணி 23.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லிட்டன் தாஸ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ஷோரிபுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது பசல்ஹக் பரூகிக்கும் வழங்கப்பட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com