சிட்னி டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 116/2

போதிய வெளிச்சம் இல்லாததால் (Bad Light) ஆட்டம் நிறுத்தப்பட்டது.46 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிட்னி டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 116/2
Published on

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா 1 ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கவாஜா உடன் லபுசேன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 47 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம். இருந்தபோதிலும் திடீரென கருமேகம் சூழ்ந்ததால் போட்டி தொடர்ந்து நடைபெறவில்லை. இன்றைய ஆட்ட நேரம் முடியும்வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதனால் 2-வது நாள் ஆட்டம் 47 ஓவருடன் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com